ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் இன்று உந்துகோலாக இருப்பது குறும்படங்கள் தான். பல படைப்பாளிகள் தங்களது குறும்படங்கள் மூலம் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். அந்தவகையில் சதீஷ் குருவப்பன் என்பவர் நிறைய குறும்படங்களை இயக்கி வருகிறார். அந்தவகையில் இவர் இயக்கிய "மிஸ்டர் காப்ளர்" என்ற குறும்படம், பேஸ்புக்கில் 2017, ஜூன் 15 அன்று வெளியிடப்பட்டது.
மனித நேயத்தை போற்றுவோம். அனைவருக்கும் மரியாதை கொடுப்போம் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்தி வெளியிடப்பட்ட இந்த குறும்படத்திற்கு அதிக பார்வைகள் கிடைத்தது. 1.30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2021, மார்ச் 17 வரை இந்த குறும்படத்தை 175 மில்லியனுக்கும் அதிகமான பேர் பார்த்து இருப்பதுடன் 5.7 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதை முன்னிட்டு இதன் இயக்குனர் சதீஷ் குருவப்பனுக்கு சென்னையில், ‛‛சாம்பியன்ஸ் ஆப் தி யுனிவர்ஸ் 2021, யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. வசனங்கள் இன்றி அதிக பார்வைகளை பெற்ற குறும்படம் என்ற சாதனை படைத்ததன் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன.