ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு-2 என பல படங்களில் நாயகியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்து விட்டதாக பெங்களூர் அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் இவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் நிகில். இவரது ஓட்டலில் 2016ம் ஆண்டு ரூ. 50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்காக அவர் எனக்கு மாதந்தோறும் ரூ. 1 லட்சம் தருவதாக கூறியிருந்தார். ஆனால் அவர் இப்போதுவரை மாதந்தோறும் ஒரு லட்சம் தரவில்லை. நான் கொடுத்த ரூ. 50 லட்சத்தையும் திருப்பித்தர மறுக்கிறார். அதனால் அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார் நிக்கி கல்ராணி. இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளர் நிகிலிடம் அம்ருதஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.