நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் |
ஒரு காலத்தில் ரஜினி, கமல் நடித்த படங்கள் தீபாவளி அன்று வெளியானால் இருவரின் ரசிகர்களுக்குமே அது டபுள் தீபாவளியாக இருக்கும். கமல்ஹாசன் நடித்த கல்யாண ராமன் படம் வெளியான தீபாவளி அன்று தான் ரஜினி நடித்த ஆறிலிருந்து 60 வரை படம் வெளியானது. ரஜினி நடித்த மனிதன் படம் தீபாவளி ரிலீஸாக வெளியானது. அதே நாளில் கமல்ஹாசனின் நாயகன் படமும் வெளியானது. கடைசியாக ரஜினி நடித்த சந்திரமுகி மற்றும் கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி, கமல் படங்கள் மோதும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்த படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும் ஊரடங்கு காலத்திலேயே படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தையுமே முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.
படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது. மே 3ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி, 100 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தையும் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் மோதும் சூழல் உருவாகியுள்ளது. ரஜினி - கமல் ஆகியோரது படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். என்று தெரிகிறது. என்றாலும் இது நடப்பது கொரோனாவின் கையில்தான் இருக்கிறது.