'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராகிவிட்டவர் பிரபாஸ். தற்போது அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகிறார். மேலும், ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் திறமையான வளரும் இயக்குனர்களின் இயக்கங்களில் நடிக்கவும் முடிவு செய்து அதன்படி நடித்து வருகிறார்.
கன்னடத்தில் 'கேஜிஎப்' என்ற மிரட்டலான ஆக்ஷன் படத்தைக் கொடுத்த பிரஷாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழ் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கப் போவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை இயக்கிய பிறகு லோகேஷும் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். பிரபாஸ், லோகேஷ் இணைவது உறுதியானால் அடுத்த வருட மே மாதத்தில் படம் ஆரம்பமாகும் என்கிறார்கள். அதற்குள் கமல்ஹாசன் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தை லோகேஷ் முடித்துவிடுவார் என்கிறார்கள்.
ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் இந்தக் கூட்டணியின் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்குச் செல்லும் போது மேலும் தகவல் வெளியாகலாம்.