ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' |
2011ல் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜி.எம்.குமார் ஜனனி அய்யர், மது ஷாலினி உள்பட பலர் நடித்த படம் ‛அவன் இவன். இப்படம் வெளியானபோது சிங்கம்பட்டி ஜமீனை தரக்குறைவாக விமர்சனம் செய்து படமாக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. அதையடுத்து சிங்கம்பட்டி ஜமீன் முருகேச தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜன் என்பவர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் டைரக்டர் பாலா, நடிகர் ஆர்யா இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக பாலா, ஆர்யாவிற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் குறித்த நாளில் ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து தான் படப்பிடிப்பில் இருந்ததால் ஆஜராக முடியவில்லை என்று ஆர்யா தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில்,நேற்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்யாவிடம் மன்னிப்பு கேட்டால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்று ஜமீன் தரப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் ஆர்யா. அதையடுத்து ஆர்யா மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சிங்கம்பட்டி ஜமீனை ஒரு காமெடியனைப் போன்று சித்தரித்திருந்ததால் டைரக்டர் பாலா மீதான வழக்கை வாபஸ் பெறமாட்டோம் என்று ஜமீன் தரப்பு கூறிவிட்டது. அதனால் பாலா மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது.