அட்டகத்தி தொடங்கி குக்கூ, மெட்ராஸ், ஜிகர்தண்டா, கபாலி, காலா என பல படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். தற்போது தனுஷின் கர்ணன் படத்திற்கு இசையமைத்திருப்பவர் அடுத்தபடியாக விக்ரமின் 60வது படத்திற்கு இசையமைக்கிறார். அதோடு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வெளியிட்ட என்சாய் என்சாமி என்ற பாடல் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. இப்படியான நிலையில், தன்னை சுற்றி நின்று பறை இசைக்கலைஞர்கள் வாசிக்க, அதற்கேற்ப நடனம் ஆடிய சந்தோஷ் நாராயணன், அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு, ‛‛என் அன்பிற்குரிய போக் இசைக்கலைஞர்களுடன்'' என பதிவிட்டுள்ளார்.