'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என 'பாகுபலி' படம் வெளிவரும் வரை பெயரை வைத்திருந்தவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஷங்கர். 'பாகுபலி' படம் வந்த இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதும் அந்த 'பிரம்மாண்ட இயக்குனர்' என்ற பெயர் இயக்குனர் ராஜமவுலிக்குப் போய்விட்டது.
தற்போது இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தை நிறுத்திவிட்டு அடுத்து தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கப் போகும் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் இயக்குனர் ஷங்கர்.
அந்தப் படம் 'முதல்வன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 1999ம் ஆண்டு அர்ஜுன், மனிஷா கொய்ரலா நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் 'முதல்வன்'. அப்படத்தில் அர்ஜுன் 'ஒரு நாள் முதல்வர்' ஆக அதிரடி செய்திருப்பார்.
அந்த முதல்வர் கதாபாத்திரத்தில் தான் ராம் சரண் நடிக்கப் போகிறாராம். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படம் மூலம் ராம் சரண் தமிழில் அறிமுகமாகிறார் என்று சொல்லப்பட்டாலும், தெலுங்கு, ஹிந்தியில் மட்டும் தான் நேரடியாக உருவாக்கப் போகிறார்கள் எனத் தெரிகிறது. மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படலாம்.