பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' | தமிழ் ரசிகர்கள் திறமையை அங்கீகரிப்பவர்கள் : அர்ஷா பைஜு | பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' |
கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வரும் விக்ரம், அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 60ஆவது படத்தில் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் துருவ் விக்ரம் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபிசிம்ஹா, சனந்த் ஆகியோர் நடிப்பதாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகவும் அப்படத்தை தயாரிக்கும் 7 ஸ்கிரின் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இப்போது இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக சூப்பர் சுப்பராயனின் மகன் தினேஷ் சுப்பராயன் ஒப்பந்தமாகி உள்ளார். அதோடு டான்ஸ் மாஸ்டராக ஷெரிப்பும், சவுண்ட் டிசைனராக குணால் ராஜனும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.