அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படம் உருவாகி வருகிறது. கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். தவிர சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், இளவரசு என பல குணச்சித்திர நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். கடந்த மாதம் சூர்யா, கொரோனா தொற்றுக்கு ஆளானதால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக தான் நிற்பது போன்ற ஒரு அதிரடியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பியதும் நலமாக உணர்கிறேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். சூர்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும்போது பாண்டிராஜின் வழக்கமான பாணியிலிருந்து இந்தப்படம் முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்பது நன்றாக தெரிகிறது. .