இயக்குனர் சுந்தர்.சிக்கு கொரோனா | நேரடியாக டிவியில்.... ‛சர்பத்' - ஞாயிறு திரைப்படம் | ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள் | கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம் | தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு | மீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் | வலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித் | யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கு எதிர்ப்பு : போலீசில் புகார் | மாளவிகாவும் வெள்ளிக்கிழமை பைக் சவாரியும் | முதலில் துப்பாக்கி... அடுத்தது கத்தி : சூர்யா 40ல் புது ட்விஸ்ட் |
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக நடிகர் பிரபுதேவா இருக்கிறார். கடந்த பார்லிமென்ட் தேர்தலின்போது விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி வெளியிட்டார். அதேபோன்று தற்போது நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனை தேர்தல் ஆணையம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
“என்னத்துக்கு நோட்டு.
எனக்கு ஒரு டவுட்டு
காச நீட்டி ஓட்டு கேட்கும்
ஆள ஆக்கு அவுட்டு. ஓட்டு
நம்ம உரிமை உணர்ந்து கிட்டா பெருமை.
காச வாங்கி ஓட்டு போட்டா தீர்ந்திடுமா வறுமை
போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. 100 சதவீதம் வாக்கு, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் பாடலில் இடம்பெற்று உள்ளது. இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.