2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
மலையாள ஆக்ஷன் ஹீரோ சுரேஷ் கோபி. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். தற்போது அவர் பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சுரேஷ்கோபி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷ்கோபி தற்போது பாப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை ஜோஷி இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் எர்ணாகுளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொண்ட சுரேஷ் கோபிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. ஆனால் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் அவர் தேர்தல் பணிகளை கவனிப்பார் என்று தெரிகிறது.