பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
கொரோனா காலகட்டத்தில் பல நடிகர்கள் ஓய்வாக இருந்தபோதும், மலையாள நடிகர் பஹத் பாசில் மட்டும் வீட்டுக்குள்ளேயே படப்பிடிப்பை நடத்தி, ஒரு படத்தையே அந்த சமயத்தில் ரிலீஸ் செய்தும் விட்டார். தொடர்ந்து பரபரப்பாக நடித்துவந்த பஹத் பாசில், தற்போது நடித்துவரும் 'மலையன் குஞ்சு' என்கிற படப்பிடிப்பின்போது, உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். குறிப்பாக மூக்கில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பஹத் பாசில், தற்போது வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார். இந்தநிலையில் அவர் கட்டிலில் படுத்து ஓய்வெடுத்து வரும் புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அவரது மனைவி நடிகை நஸ்ரியா, 'ஆல் இஸ் வெல்” என கூறியுள்ளார். பஹத் பாசில் நடித்து வரும் இந்தப்படத்தை அவரது தந்தையான இயக்குனர் பாசிலே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..