இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பேர் வாங்கியவர், கடந்த 2012ம் ஆண்டு ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜெனிலியா, நடிப்பதிலிருந்து விலகி பொறுப்பான தாயாக, குடும்பத்தலைவியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கையில் கட்டுடன் ஜெனிலியா நிற்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ளச் சென்ற போது, கையில் இந்த எலும்பு முறிவு ஏற்பட்டதாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும், அதோடு தன் பிள்ளைகளுக்கு துணையாக இருக்கவும் தான் ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ள விரும்பியதாகவும், அப்போது தவறி விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் ஜெனிலியா அதில் தெரிவித்துள்ளார்.
கூடவே ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ள முயற்சித்து தான் கீழே விழுந்த வீடியோவையும் அப்பதிவில் அவர் பகிர்ந்துள்ளார்.