‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
80களில் ஹிந்தியில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. இன்றைக்கு வாத்தி கம்மிங் மாதிரி அன்றைக்கு ஐ எம் ஏ டிஸ்கோ டான்சர் என்று பாடி ஆடித் திரிந்தார்கள் 80ஸ் கிட்ஸ். தமிழில், மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் நடித்துள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்தில் வில்லனாக நடித்தார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் குதித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் சார்பில் எம்.பி.யாக இருந்தார். மேற்கு வங்கத்தை குலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அவரது பெயர் அடிபட்டதால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று கோல்கட்டாவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார். "நண்பர் மிதுன் சக்ரவர்த்தியை பாரதிய ஜனதா கட்சிக்கு மகிழ்வுடன் வரவேற்கிறேன்" என்றார் பிரதமர் மோடி.
மிதுன் பேசும்போது, என்னை சாதுவான பாம்பு என்று நினைத்துவிடாதீர்கள். நான் ராஜ நாகத்தை போன்றவன். ஒருமுறை தீண்டினாலே உயிர் போய்விடும், என அவரது திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனத்தை, மேடையில் பேசி கைதட்டல் பெற்றார்.