'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
தமிழில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் செம்மலர் அன்னம். இவர் நடித்துள்ள 'ம்ம்ம் (சவுண்ட் ஆப் பெயின்)' என்ற மலையாள படம் ஆஸ்கர் விருது போட்டியில் இடம் பெற்றுள்ளது. குரும்ப மொழியில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமான இதில் தமிழில் திமிரு, கொம்பன் பிகில் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த ஐ.எம்.விஜயன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். விஜிஷ் மணி இயக்கி உள்ளார்.
இதுப்பற்றி செம்மலர் கூறுகையில், குரும்ப இன மக்களின் முக்கிய தொழில் தேன் எடுப்பது. அது தொடர்பான கதை தான் இது. கருப்பு நிறத்தில் நடிகை வேண்டும் என என்னை தேர்ந்தெடுத்தனர். 10 நாளில் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படம் படமாக்கப்பட்டது. ஆஸ்கர் பிரிவில் எங்கள் படம் இருப்பது ஆனந்தத்தை தருகிறது. தமிழில் 6 ஆண்டுகளாக நடித்துள்ளேன். மலையாளத்தில் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தேன். இப்போது இப்படம் மூலம் நாயகியாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளேன் இப்படி ஒரு வாய்ப்பை தந்த இயக்குனர் விஜிஷ், எடிட்டர் லெனின் உள்ளிட்ட படக்குழுவிற்கு நன்றி என்றார்.