அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த போதும், மாளவிகா மோகனனுக்கு மக்களிடையே நல்ல அடையாளத்தைப் பெற்றுத் தந்தது மாஸ்டர் படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா அப்படத்தில் நடித்திருந்தார். 50 நாட்களை கடந்தும் மாஸ்டர் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், இதுவரை வெளிவராத மாஸ்டர் பட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தற்போது மாளவிகா மோகனனும் மாஸ்டர் படம் பற்றிய நினைவுகளை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “50 நாட்கள் கடந்துவிட்டது மாஸ்டர். இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது. பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் வாய்ப்பு, மிகச்சிறந்த வாழ்நாள் கால நண்பர்கள், இனிவரும் எனது வாழ்நாள் முழுவதும் அசைபோடவைக்கும் நிறைய நினைவுகள்..” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.