அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

'மாரீசன்' என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைகள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடும் அரசு வழக்கறிஞர் சித்தார்த் நீலகண்டாவாக சாய் ராம் ஷங்கர் நடிக்கும் இத்திரைப்படத்தில், நான்கு மர்மக் கொலைகளையும், சில தனிப்பட்ட இழப்புகளையும் அவர் எதிர்கொள்கிறார். அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே கதை.
வினோத் விஜயன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், ஷ்ருதி சோதி, ஆஷிமா நார்வால் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'ஓ மை பிரண்ட்' புகழ் ராகுல் ராஜ் பாடல்களுக்கு இசையமைக்க, கோபி சுந்தர் பின்னணி இசையமைக்கிறார்.
தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் திரைப்படத்தை இயக்குநர் வினோத் விஜயன், எஸ் ஆர் எம் பல்கலைக்கழக தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் கர்லபட்டி ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.