அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் இன்று யு டியூபில் வெளியிடப்பட்டது. பொதுவாக, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் டீசர், டிரைலர், போஸ்டர் என அனைத்து விளம்பர விஷயங்களிலும் அவர்களது பெயர்கள் கண்டிப்பாக இடம் பெறும்.
ஆனால், இன்று வெளியான 'ஜகமே தந்திரம்' டீசரில் எந்த இடத்திலும் தனுஷ் பெயர் இடம் பெறவில்லை. படத்தின் பெயர் வரும் இடத்திலும், அடுத்து மற்ற டெக்னிஷியன்கள் பெயர் வரும் இடத்தில் கூட அவர் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தனுஷ் ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் ரசிகர்கள் நிர்வகிக்கும் ஒரு டுவிட்டர் கணக்கில் இது குறித்து தயாரிப்பாளரைக் குறிப்பிட்டு தங்களது கண்டனங்களை கடுமையாகப் பதிவு செய்துள்ளார்கள்.
“டீசரில் தனுஷ் பெயரை ஏன் சேர்க்கவில்லை. தனுஷ் இல்லையென்றால் 'ஜகமே தந்திரம்' இல்லை. தனுஷ் என்ற பெயர் தான் ஓடிடி தளத்தில் உங்களுக்கு இந்தப் படத்திற்கு சாதனை விலையை வாங்கிக் கொடுத்துள்ளது. கோலிவுட்டில் நீங்கள் தொடர்ந்து வாழ எங்களது வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்கள்.
ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாவது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த், “ஒரு தமிழ்ப் படத்தை உலக ரசிகர்களுக்குக் கொண்டு போய் சேர்க்க 'ஜகமே தந்திரம்' படத்தை வெளியிட நெட்பிளிக்ஸ் தளத்துடன் இணைவது உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தைரியமான முயற்சிகளையும், யோசனைகளையும் நாங்கள் எந்த பயமும் இன்றி ஆதரிக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'ஜகமே தந்திரம்' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் ஏற்கெனவே தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்.