தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாள சினிமாவில் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது. 100 கோடி வசூல், வெள்ளிவிழா என த்ரிஷயம் படைத்த சாதனைகள் பல. குறிப்பாக இந்திய மொழிகள், சீன மொழிகளில் ரீமேக் ஆனது. தற்போது ஹாலிவுட்டிலும் தயாராகிறது.
ஒரு குடும்ப தலைவன் தனக்கிருக்கும் சமயோசித அறிவைக் கொண்டு தன் குடும்பத்தை ஒரு கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றுவதுதான் த்ரிஷ்யத்தின் ஒன்லைன் ஸ்டோரி. மோகன்லாலும், மீனாவும் குடும்ப தலைவனும், தலைவியாகவே வாழ்ந்தார்கள். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி அதவும் வெற்றி பெற்றிருக்கிறது. 2ம் பாகம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனாதான் நடிக்கிறார்கள்.
இப்போது தமிழிலும் ரீமேக் ஆக பேச்சு நடக்கிறது. முதல் பாகத்தில் நடித்த கமலும், கவுதமியும் தற்போது பிரிந்து விட்டதால் படம் தொடங்குவதில் சின்ன பிரச்சினை இருக்கிறது. இந்த நிலையில் த்ரிஷ்யத்தின் 3ம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாராகி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: த்ரிஷ்யம் 3ம் பாகத்தை தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கான ஐடியாவும் இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு இருக்கிறது. மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும் இதுகுறித்து பேசியிருக்கிறார்கள் என்கிறார் ஆண்டனி.