'சிறை' அக்ஷய் குமாரின் புதிய படம் | பீரியட் படத்தில் நடிப்பது பெருமை : டொவினோ தாமஸ் | 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த ஆத்மிகா | ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் |

அரசியல் பிரவேசம் இல்லை என்பதை உறுதிப்படுத்தி விட்ட ரஜினிகாந்த், தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் அடுத்த மாதம் முதல் கலந்து கொள்ளயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இன்று ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன். அவர்களின் இந்த சந்திப்பு 45 நிமிடம் நடைபெற்றுள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்த பிறகு ரஜினியை சந்தித்து நான் ஆதரவு கேட்பேன் என்று கமல்ஹாசன் கூறி வந்ததால், அவர்களின் இந்த சந்திப்பு நலம் விசாரிப்பாக மட்டுமே இல்லாமல் அரசியல் சம்பந்தமாகவும் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.




