நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் |
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடித்துள்ள 'த்ரிஷயம் 2' நாளை ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடன் 'சாட்' செய்தார். அப்போது தன்னுடைய அடுத்த படம் பற்றிய தகவலை அவர் வெளியிட்டார்.
தான் இயக்குனராக அறிமுகமாகும் 'பர்ரோஸ் - கார்டியன் ஆப் டி காமாஸ் டிரஷர்' (Barroz : Guardinan Of D'Gama's Treasure) படம் தான் தன்னுடைய அடுத்த படம் எனத் தெரிவித்தார்.
இப்படம் பற்றிய அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் இருந்தது. குழந்தைகளைக் கவரும் விதத்தில் 3 டியில் இப்படம் உருவாக உள்ளது.
இப்படத்திற்கு அமெரிக்க ரியலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற லிடியன் நாதஸ்வரம் இசையமைக்க உள்ளார். படம் குறித்து ஒரு வருடத்திற்குப் பிறகு மோகன்லாலை சந்தித்தது பற்றி லிடியன் அவருடைய டுவிட்டர் தளத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
மலையாள சினிமா உலகில் அதிக பட்ஜெட்டில் உருவாக உள்ள படம் இது என்கிறார்கள்.