சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது |

லைக்கா தயாரிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் நநடிக்கும் 'டான்' படம் பற்றிய அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.
அப்படத்திற்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்தின் இயக்குனரும் விஜய் 65 படத்தின் இயக்குனருமான நெல்சன் திலிப்குமார் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகயன், “நன்றிணா, டாக்டர் அப்டேட் எதுவும் இல்லையா, விஜய் சார் படம் அப்டேட்... (எப்படி கோர்த்து உட்டேனா)” என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பதிலுக்கு சற்றே பதறிய நெல்சன், “ஹஹஹஹா, அடேய் வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா” என பதில் தெரிவித்திருந்தார் அதற்கு சிவகார்த்திகேயன் 'ஏதோ உங்களுக்கு என்னால முடிஞ்சது” என கமெண்ட் போட்டிருந்தார்..
இவர்கள் இருவரின் இந்த கேள்வி-பதிலுக்கு விஜய் ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்திருந்தனர். 'மாஸ்டர்' படம் ஏறக்குறைய ஓடி முடித்து ஓடிடியிலும் வெளிவந்துவிட்டதால், விஜய் 65 படம் பற்றிய அப்டேட்டுக்கு விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.




