ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் ஆர்யா ஒரு சைக்கிள் வீரர். பல சர்வதேச சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவரது காரின் பின்புறம் எப்போதும் ஒரு சைக்கிள் இருக்கும். சென்னையை சுற்றி படப்பிடிப்பு நடந்தால் வீட்டில் இருந்து சைக்கிளிலேயே படப்பிடிப்புக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அவ்வப்போது நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்வார். சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் 100 கி.மீ. வரை சைக்கிள் பயணம் செய்ததாக கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது 400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை தனது நண்பர்களுடன் இணைந்து வெற்றிகரமாக முடித்து விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆர்யாவின் சைக்கிள் பயண சாதனையை நடிகர் விவேக்கும் பாராட்டி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் "உங்களின் 400 கி.மீ. சைக்கிள் பயணத்துக்கு வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர்களுக்கும் உந்துதலாக இருக்கிறீர்கள்'' என்று பாராட்டி உள்ளார்.