இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் நயன்தாரா நடித்த கேரக்டரில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பாஸி பதானா நகரில் நடந்தபோது விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்தி நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. இதை தொடர்ந்து ஜான்வி கபூர் விவசாயிகளுக்கு ஆதரவான கருத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த நிலையில் பாட்டியாலாவில் உள்ள பூபிந்தரா பகுதியில் நடந்து வந்த படப்பிடிப்பை, போராடும் விவசாயிகள் மீண்டும் தடுத்து நிறுத்தினார்கள். படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். ஜான்விகபூரை திரும்பி செல்லும்படி கோஷமிட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பாதுகாப்பாக அவர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போதும் விவசாயிகள் விடவில்லை. ஓட்டல் முன்பும் கூடி போராட்டம் நடத்தினர். இதனால் தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும்வரை காத்திருக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது.