ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
யஷ் நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதிக பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய சினிமாவின் முதல் இடத்தையும் பிடித்தது. இந்த டீசரில் யஷ் எந்திர துப்பாக்கியின் குழலில் சிகரெட் பற்ற வைத்து புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் யஷ் பொறுப்பான பணிகளை செய்கிறார். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவரது புதிய படமான கே.ஜி.எப்.2 படத்தில் அவர் சிகரெட் பிடிக்கும் கட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஏனென்றால் நடிகர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். இது அவரது ரசிகர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். புகைப்பிடிக்கும் காட்சியை நீக்கினால் அது இந்த சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும். அரசின் இந்த கருத்து அனைத்து படங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.