நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடிக்கும் கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் டீசர் கடந்த வாரம் யு டியுபில் வெளியானது.
வெளியான நேரத்திலிருந்தே தொடர்ந்து பல புதிய சாதனைகளைப் படைத்து வந்தது. தற்போது மேலும் ஒரு சாதனையாக 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு வாரத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதோடு 7.4 மில்லியன் லைக்குகளும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளும் இந்த டீசருக்குக் கிடைத்துள்ளது.
இந்திய அளவில் பிரபலத்திலும், வசூலிலும் சாதனை படைத்த பல ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஹீரோக்கள் படைக்காத ஒரு சாதனையை கன்னட உலகின் இளம் ஹீரோவான யாஷ் படைத்திருப்பது இந்தியத் திரையுலகல் உள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதைவிட பொறாமைப்பட வைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அது பற்றி பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில், “மற்ற திரையுலகத்தினரின் வயிற்றில், கன்னடர்களின் சார்பாக பிரஷாந்த் நீல் விட்ட குத்து இது,” என பாகுபலி 2 டிரைலர், மற்றும் ஆர்ஆர்ஆர் பட ஆகியவற்றை ஒப்பிட்டு தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.