நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ இடம் பெற்றார் அதில் எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியது. அதன் பின் வெளிவரும் அனைத்து படங்களிலும் அப்படியான காட்சிகள் வந்தால் அந்த எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுகின்றன. படத்தில் வரும் காட்சிகளுக்கே அவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்றால் அந்தப் படங்களுக்கான போஸ்டர்களிலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற குரல் சமீப காலமாக எழுந்துள்ளது.
பொது இடங்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள், சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்படும் போஸ்டர்கள் ஆகியவற்றில் புகை பிடிக்கும் நடிகர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இடம் பெறுகிறது.
தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி', விஜய் நடித்த 'சர்க்கார்', சந்தானம் நடித்த 'டகால்டி' ஆகிய படங்களின் போஸ்டர்கள் வெளியான போது அப்படங்களின் நாயகர்கள் புகை பிடிக்கும் போஸ்டர்கள் தான் இடம் பெற்றன. அவற்றிற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியது. அதன்பிறகு அவற்றை வாபஸ் பெற்றார்கள்.
நேற்று செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' என்ற புதிய படத்திற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் தனுஷ் சுருட்டு பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது. அதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ''எத்தனை முறை எதிர்ப்புகள் வந்தாலும் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இப்படி புகைபிடிக்கும் போஸ்டர்களை வெளியிடும் நடிகர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கையும் சமூகவலைதளத்தில் எழுந்து வருகிறது.