குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
கடினமான நாட்களைத் தந்த 2020ம் ஆண்டு முடிந்து விட்டது. பிறந்துள்ள 2021 புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியாக வரவேற்று வருகின்றனர். திரைப் பிரபலங்களும் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களையும், கொண்டாட்டங்களையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையர் சிலரின் புத்தாண்டு வாழ்த்துக்களும், சபதங்களும் இதோ...
சூர்யா
2021 நமக்கு அற்புதமான ஆண்டாக அமையட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், அன்புடனும், மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். நானும் என்னவளும் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என வழக்கம் போலவே இருவரும் கட்டிப் பிடித்தபடி காதல் செய்யும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கூடவே, அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்போது நாம் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத கட்டத்தை கடந்து விட்டோம். அதேபோல் மறக்கமுடியாத 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம். சிறந்த தருணங்கள், வெற்றி, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், அமைதி, திருப்தி மற்றும் அன்பு ஆகியவற்றுடன் இந்த அற்புதமான 2021ஐ நோக்கி செல்லும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
2021 ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கட்டும் என தன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். படப்பிடிப்பு தளத்தில் இருந்த படியே தனது வாழ்த்துக்களை அவர் கூறியுள்ளார்.
சாக்ஷி அகர்வால்
கெட்டதை எல்லாம் மறப்போம். நல்லதை எதிர்பார்த்து முன் நகர்வோம். கவலைகளை எல்லாம் தூக்கி எறியுங்கள். 2021 கொண்டாட்டத்துடன் ஆரம்பமாகட்டும் என வாழ்த்தியுள்ளார். மேலும், 2021 இல் தன்னை நேசிப்பர்களுக்கு மீண்டும் மீண்டும் அன்பையும், அதோடு மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் தன்னை உணர வைப்பதும்தான் எனது நோக்கமே என தனது கவர்ச்சியான நீச்சலுடைப் புகைப்படங்களை வெளியிட்டு சாக்ஷி வாழ்த்தியுள்ளார்.
விஷ்ணு விஷால்
காதலி ஜூவாலா கட்டாவுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
குஷ்பு
பை பை 2020. இந்த கஷ்டமான ஆண்டு போதும். நமது வாழ்க்கையில் இருந்து கவலைகள் பறந்து போகட்டும். வாழ்வில் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மஞ்சள் நிறம் கொண்டு வரட்டும் என புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் குஷ்பு.
அமலா பால்
“புதிதாக சில முடிவுகளையும் எடுத்து இருக்கிறேன். ஆன்மீக உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. தான் என்ற அகந்தை மறைந்து விட்டது. அந்த அகந்தையில் இருந்து விழித்து எழுந்து இருக்கிறேன். எனக்குள் இருக்கிற குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு கொடுத்தேன். எனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கவுரவமாகவும் நன்றியோடும் ஏற்றுக்கொண்டேன்.
வருத்தம், வேதனை, கஷ்டம் போன்றவற்றில் இருந்து ஓடிப்போய்விட வேண்டும் என்று நினைத்தது இல்லை. அவற்றில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். பழைய சினேகிதர்களை சந்திக்க செல்ல வேண்டும். விரோதிகளை மன்னிக்க வேண்டும். நம்மை அறிந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் 2020 இல் நான் புதிதாக கற்றுக் கொண்ட பாடங்கள். 2021 புத்தாண்டை வண்ணமயமாக எதிர்பார்க்கிறேன்” என அமலா பால் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஸ்ருதிஹாசன்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒரு சவாலான ஆண்டை நாம் கடந்து வந்து விட்டோம். இந்த புத்தாண்டு நம்பிக்கையுடனும், நேர்மறையான சிந்தனைகளுடனும் மலரட்டும். நாம் அனைவரும் மாற்றத்தையும், அன்பையும் கொண்டு வர பொறுப்பேற்போம். இது தான் அதற்கு சரியான தருணம். நாம் இதனை செய்யும் போது காலமும் நமக்கான சிறப்பான மாற்றத்தைக் கொடுக்கும் என வாழ்த்தியுள்ளார் ஸ்ருதி.
ரைசா வில்சன்
2021 ப்ளீஸ் எங்களுக்கு கொஞ்சம் இரக்கம் காட்டு என வித்தியாசமாக தனது புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் ரைசா வில்சன்.
செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ்
நடிகர் தனுஷ் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடிய புகைப்படங்களை, தனுஷின் சகோதரரும், இயக்குநருமான செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், ஒருவழியாக இணைந்துவிட்டோம். 5 வருடத்திற்குப் பிறகு முதல் முறையாக புத்தாண்டை தனுஷுடன் கொண்டாடுகிறேன் என அவர் கூறியுள்ளார். இந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் ஜி.வி பிரகாஷும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சனா சிங்
ரேணிகுண்டா, கோ, அஞ்சான், மீகாமன், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சஞ்சனா சிங் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹரீஷ் கல்யாண்
2020ல் என்னுடன் பயணம் செய்து, என்னை மேலும் உறுதியாக உணர வைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பாடங்களைக் கற்றுத் தந்தவர்களுக்கும் நன்றிகள். நாம் எல்லோரும் ஒரு கடினமான பாதையை விட்டுக் கொடுக்காமல் கடந்து வந்துள்ளோம். பரந்த புன்னகையுடனும், அரவணைப்புடனும் 2021 ஐ வரவேற்போம் என தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் ஹரீஷ் கல்யாண்.