'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் தியாகராஜன் தயாரிப்பில் வெற்றிச்செல்வன் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் பிரஷாந்த் நடித்த ஜானி திரைப்படம், இன்று (டிசம்பர் 14ஆம் தேதி) உலகம் முழுக்க வெளியாகிறது. வெளிநாடுகளில் ஜானி படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது
வெளிநாடுகளில் நடிகர் பிரஷாந்த்துக்கு எப்போதுமே ஏராளமான ரசிகர்கள் உண்டு. இத்தனை காலத்துக்குப் பிறகும் அவருடைய வெளிநாட்டு ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
ஸ்ரீலங்காவில் மட்டும் 22 திரையரங்குகளில் ஜானி படம் வெளியாகிறது சிங்கப்பூரில் 12 தியேட்டர்களில் ஜானி படம் திரையிடப்படுகிறது. மலேஷியாவிலும் ஏராளமான தியேட்டர்களில் ஜானி படம் வெளியாகிறது. அங்குள்ள ரசிகர்களை மகிழ்விக்க 2 நாட்கள் மலேசியா, சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் திட்டமிட்டிருக்கிறார் பிரசாந்த். ஜானி படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தால் மற்ற வெளிநாடுகளுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.