21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' | 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' | ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ப்ரீத்…இப்படி ஒரு கிளாமர் !! | நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். அவர் தன்னை சினிமாவில் ஹீரோவாக்குவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றி விட்டார் என்று தொழிலதிபர் மகன் மைத்ரேயா என்பவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
எனது அப்பாவுக்கு சினிமா தொழில் அல்ல. ஆனாலும் 150 படங்கள் வரைக்கும் பண உதவி செய்திருக்கிறார். இதனால் இழந்தது தான் அதிகம். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. இதனால் இயக்குனர் மிஷ்கினை அணுகினேன். அவர் என்னை ஹீரோவாக போட்டு படம் எடுப்பதாக உறுதி அளித்தார். இதற்காக ஒரு பெரும் தொகை கொடுத்து 2015ம் ஆண்டு ஜூலை 10ந் தேதி ஒரு ஒப்பந்தம் போட்டோம்.
"இனி நான்தான் உனக்கு அப்பா, அம்மா, காட்பாதர் எல்லாம் " என்று அப்போது கூறினார். சவரக்கத்தி படம் முடிந்ததும் நமது படத்தை தொடங்கலாம் என்று கூறினார். இதற்காக 6 மாதம் வரை காத்திருந்தோம். அதன் பிறகு விஷால் நடிக்க துப்பறிவாளன் படத்தை இயக்கினார். அப்போதும் காத்திருந்தோம்.
நாங்கள் ஒப்பந்தம் போட்டபோது அவர் எனக்கு சொன்ன கதைதான் சைக்கோ. அந்த படத்தில் நடிக்க என்னை பயிற்சி எடுத்துக் கொள்ளச் சொன்னார் நானும் எடுத்தேன். போட்டோ ஷூட், டெஸ்ட் ஷூட் எல்லாம் எடுத்தார். நான் நன்றாக நடிப்பதாக பாராட்டினார். ஆனால் இப்போது அந்த படத்தை இன்னொரு நடிகரை வைத்து எடுக்கிறார்.
இது தொடர்பாக நாங்கள் கேட்டபோது "உன்னை வைத்து படமும் எடுக்க முடியாது. உன் பணத்தையும் இப்போதைக்கு திருப்பித் தரமுடியாது" என்று கூறிவிட்டார். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக பெரும் தொகை கொடுத்து 3 வருடம் அவர் சொன்னதையெல்லாம் செய்துவிட்டு ஆனால் அது நடக்காதபோது அதன் வலிதான் அதிகமாக இருக்கிறது.
நாங்கள் கொடுத்த பணத்தை விட அவர் மீது அன்பும், மரியாதையும் அதிகம் வைத்திருந்தோம். ஒப்பந்தம் இருப்பதால் அதை வைத்துக் கொண்டு நீதிமன்றம் செல்லலாம் என்று நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால், நான் நம்பும் நீதிமன்றம் மிஷ்கினின் மனசாட்சி தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.