சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் |
வருத்தப்படாத வாலிபர்சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் சீமராஜா. சமந்தா கதாநாயகியாக நடித்த இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியன் நடித்திருக்கிறார். ரீ-என்ட்ரி கொடுத்துள்ள சிம்ரன், மலையாள நடிகர் லால் ஜோடியாக நடித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியான இப்படத்துக்கு, ஊடகங்களின் விமர்சனங்களும் சுமாராக தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீமராஜா படத்தின் தமிழ்நாடு திரையரங்க முதல் நாள் வசூல் 13.5 கோடி என்று தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா அறிவித்துள்ளார்.
“சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்" என்று ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.