மிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு | பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு | ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்? | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? | சீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு |
பாலிவுட்டின் ஜாம்பவனான அமிதாப் பச்சன் முதன்முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு உயர்ந்த மனிதன் என பெயரிட்டுள்ளனர். அமிதாப் பச்சன் உடன் எஸ்.ஜே.சூர்யாவும் முதன்மை ரோலில் நடிக்கிறார்.
கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை இயக்குகிறார். திருச்செந்தூர் முருகன் புரெடாக்சன்ஸ் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் பை எலிமென்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளில் இப்படம் தயாராகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெறுகிறது. 2019, மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது.
"என் கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் முதல் படத்தை நான் இயக்குவது பெரிய பெருமை" என்கிறார் தமிழ்வாணன்.
"துணை இயக்குனராக திரை உலகில் கால் பதித்த காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்" என்கிறார் எஸ் ஜே சூர்யா.