பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகியும், கர்நாடக இசை மேதையுமான எம்.எல்.வசந்தகுமாரியின் நினைவு தபால் தலை நேற்று வெளியிடப்பட்டது. நேற்று எம்.எல்.வசந்தகுமாரியின் 90வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும் தபால் தலை வெளியீட்டு விழாவும் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.
சமுதாய அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எம்.எல்.வசந்தகுமாரியின் தபால் தலையை வெளியிட மத்திய ரெயில்வேதுறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சமுதாய அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. அதனை அறக்கட்டளை நிர்வாகி பிரீத்தி சீனிவாசன் பெற்றுக் கொண்டார். பழம்பெரும் பாடகியின் இந்த முக்கிய விழாவில் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.