'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களைத் தொடரந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படம் மெர்க்குரி. பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13-ந் தேதி தமிழ்நாடு தவிர மற்ற பகுதிகளில் வெளியாகிறது. ஸ்டிரைக் முடிந்த பிறகு தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பீட்சா தமிழைப்போலவே தெலுங்கிலும் நல்ல வசூலை குவித்தது. அதனால் இந்த மெர்க்குரி படத்தையும் பீட்சாவுக்கு இணையாக தெலுங்கில் வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
பிரபுதேவாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், இந்திய சினிமாவை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் படமாகவும் இருக்கும் என்கிறார் அவர்.