பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

தியேட்டர்களில் படத்தை திரையிடும் கியூப் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1ந் தேதி முதல் புதிய படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவரவேண்டிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு வருகிற வெள்ளிக்கிழமை படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் போராட்டம் தொடர்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஒரு மாத காலமாக நமது திரைத்துறையின் நலன் கருதி தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடருக்கு எதிராக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 5.3.2018 (நேற்று) அன்று ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே கூட்டு நடவடிக்கை குழு சார்பில் டிஜிட்டல் சர்வீஸ் புரொவடைருக்கு வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.
நாம் எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினாலும், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்த பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்ததாலும், நமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.