‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

ஜனவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான கடந்த வாரம் “நிமிர், மன்னர் வகையறா, சரணாலயம்” ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களும், தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆன 'பாகமதி', ஹிந்தியிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆன 'பத்மாவத்' ஆகிய படங்கள் வெளிவந்தன.
இவற்றில் நேரடித் தமிழ்ப் படங்களுக்குப் பெரிய வரவேற்பில்லை என்றே வினியோக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அதே சமயம், டப்பிங் படங்களான 'பாகமதி, பத்மாவத்' ஆகிய இரண்டு படங்களுக்கும் ஓரளவிற்கு வரவேற்பு இருக்கிறது. முன்பதிவிலும் தமிழ்ப் படங்களை விட முன்னணியில் இருக்கிறது என்கிறார்கள்.
அனுஷ்கா நடித்துள்ள 'பாகமதி' படத்தை விட தீபிகா படுகோனே நடித்துள்ள 'பத்மாவத்' படத்திற்கு வரவேற்பு கூடுதலாக இருக்கிறதாம். 'பத்மாவத்' படத்திற்கு எதிராக எழுந்த சர்ச்சைகள் தான் இந்தப் படத்தைப் பலரையும் பார்க்க வரவழைத்துள்ளது என்கிறார்கள்.
கடந்த வருடம் 'மெர்சல்' படம் அப்படித்தான் சர்ச்சையால் பெரிய வசூலைப் பெற்றது. அது போலவே, 'பத்மாவத்' படம் தமிழ்நாட்டில் நிறைவான வசூலைப் பெற்று, லாபத்தை சம்பாதித்துக் கொடுத்து விடும் எனிகறார்கள்.




