'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் பாசறையில் இருந்து வந்தவர் கிரேன் மனோகர். சினிமா படப்பிடிப்பில் கிரேன் ஆபரேட்டராக இருந்து வந்த அவர் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் பரவலாக மற்ற டைரக்டர்களின் படங்களிலும் நடித்து வந்தார்.
வடிவேலு உள்ளிட்ட மெகா காமெடியன்களின் கூட்டணியில் நடித்து பிரபலமான கிரேன் மனோகர், இதுவரை காமெடி வேடங்களிலேயே நடித்திருக்கும் நிலையில், தற்போது இன்னும் பேசுமா என்றொரு படத்தில் முதன்முறையாக குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி கிரேன் மனோகர் கூறுகையில், தொடர்ந்து காமெடி வேடங்களிலேயே நடித்து வந்த என்னை இன்னும் பேசுமா என்ற படத்தில் ஒரு குணசித்ர வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். டைரக்டர் மணிவண்ணன் நடிப்பது போன்ற வேடம். கதைப்படி ஷேர் ஆட்டோ டிரைவராக நடித்துள்ள நான், கதையில் முக்கிய பங்கு வகிக்கிறேன். ஒரு தத்துவப்பாடலிலும் நடித்திருக்கிறேன். அந்த பாடல், திருமணமாகாத ஏழை பெண்களைப்பற்றிய கருத்தினை கொண்டது.
அந்த வகையில், இதுவரை ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நான் இந்த படத்தில் முதன்முறையாக கண்கலங்க வைக்கும் வகையில் நடித்திருக்கிறேன். முதன்முறையாக இந்த மாதிரி மனசைத் தொடும் ஒரு வேடத்தில் நடித்தது எனக்கு மனதளவில் திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார் கிரேன் மனோகர்.