மோகன்லாலின் ராவண பிரபு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஹைதராபாத்தில் கன்னடத்தில் பேசிய சர்ச்சைக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் | ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பும் சோபிதா துலிபாலா | சிரஞ்சீவி குடும்பத்தினர் பார்த்து ரசித்த 'ஓஜி' | சினிமாவிலும் கை வைத்த டிரம்ப்: இந்தியப் படங்களுக்குப் பெரும் பின்னடைவு | தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' |
காமெடி நடிகர்களில் மிக வித்தியாசமானவர் சுருளிராஜன். பிற்காலத்தில் வந்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருக்கு பாதை போட்டுக் கொடுத்தவர் அவர்தான். யதார்த்த காமெடியன்களுக்கு வழிவகுத்தவர் அவர். வாழ்வின் விழிம்பு நிலையில் உள்ள அடித்தட்டு மக்களின் காமெடியை சினிமாவுக்குள் கொண்டு வந்தவர்.
ஒரு காலத்தில் அவர் இல்லாமல் சினிமாக்கள் வந்ததில்லை. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 1980ம் ஆண்டில் 50 படங்களில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்தார். இது ஒரு சரித்திர சாதனையாகும். அன்புக்கு நான் அடிமை, அந்தரங்கம் ஊமையானது, தெய்வீக ராகங்கள், எதிர் வீட்டு ஜன்னல், எல்லாம் உன் கைராசி, எங்க வாத்தியார், கீதா ஒரு செண்பக பூ, ஜானி, காளி, குமரி பெண்ணின் உள்ளத்திலே, குருவிக்கூடு, முரட்டுக்காளை, நான் போட்ட சவால், ஒளி பிறந்தது, பெண் பணம் பாசம், பொல்லாதவன், ருசி கண்ட பூனை, உல்லாச பறவைகள், வண்டிச் சக்கரம், வேலி தாண்டிய வெள்ளாடு ஆகியவை அவற்றில் முக்கியமான படங்கள்.
மாந்தோப்பு கிளியே படத்தில் அவர் நடித்த கஞ்சன் கேரக்டர் இதுவரை கோல்டன் காமெடியாக இருக்கிறது. முரட்டுக்காளை படத்தில் சரியாக பார்த்தால் சுருளிராஜன் தான் ஹீரோ. தன் பெற்றோரை கொன்ற ஜெய்சங்கர் குடும்பத்தை பழிவாங்க அவர் ரஜினியை பயன்படுத்திக் கொள்வார். ஒளிபிறந்தது, மனிதரில் இத்தனை நிறங்களா, ஹிட்லர் உமாநாத் பாலாபிஷேகம் போன்றவை இப்போதும் அவர் பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது.