தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
கொஞ்சும் குமரி, பெற்றால் தான் பிள்ளையா உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை கேஆர் இந்திரா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. காஞ்சிபுரத்தை பூர்வீமாக கொண்ட இந்திரா, 14 வயதில் சென்னைக்கு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1963-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‛கொஞ்சும் குமரி' படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இந்திரா, தொடர்ந்து பெற்றால் தான் பிள்ளையா, சுமைதாங்கி, பாத காணிக்கை, ஹலோ ஜமீன்தார், கந்தன் கருணை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினியுடன் பணக்காரன், மன்னன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ‛கிரிவலம்' படத்தில் ரிச்சர்டின் பாட்டியாக நடித்தார்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 250 படங்கள் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாது 500 படங்களுக்கு மேல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ஏராளமான சீரியல்களில் நடித்திருக்கிறார்.
சென்னை, தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்த இந்திராவுக்கு ஏற்கனவே மூட்டு வலி இருந்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இந்திராவுக்கு கணவர் சங்கர நாராயணன், மகள் ஜெயகீதா ஆகியோர் உள்ளனர். ஜெயகீதா, தற்போது டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக உள்ளார். இந்திராவின் உடல், அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க உறுப்பினரான கே.ஆர்.இந்திராவிற்கு நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாளை(மார்ச் 17-ம் தேதி), வெள்ளியன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.