அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தனியாக இணையதளம் தொடங்கி உள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று ரஷிய கலாச்சார மையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு இணையதளத்தை துவக்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாது:
நான் சினிமாவில் என்னவாக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கற்றேன். டெக்னீஷியன் ஆவதுதான் விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
யாரோ ஒருத்தர்( சுப்பிரமணியசாமி) தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான். எங்கு பொறுக்கினாலும் டில்லியில் பொறுக்க மாட்டேன். திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம். இது தன்மானம், அரசியல் இல்லை.
குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம். கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம் கண்ணன், ராஜீவ் மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.