தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 9ம் தேதி வெளிவந்த 'சென்னை 28 - இரண்டாம் இன்னிங்ஸ்' படம் கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 23ம் தேதி வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போனதால், சில தியேட்டர்களில் மீண்டும் 'சென்னை 28 - 2' படத்தைத் திரையிட ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார். சினிமா பிரியரான அஷ்வின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் உடையவர்.
'சென்னை 28 - 2' படத்தைப் பார்த்த அஷ்வின், “சென்னை 28 - 2, என்ன ஒரு அற்புதமான படம். என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாகத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் படத்தில் நானும் பங்கெடுத்திருக்கலாம்,” எனப் பாராட்டியுள்ளார்.