ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற பெயரில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார் இயக்குனர் சுந்தர்.சி. அந்தப்படத்தின் ஹீரோ யார் என்பதில் இன்னமும் குழப்பம் நீடிப்பதால், அதற்கு முன்னதாக, மீசைய முறுக்கு என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்தும் வருகிறார். சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹிப் பாப் தமிழா ஆதி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அத்துடன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் ஆகிய பொறுப்புக்களையும் ஆதியே ஏற்றுள்ளார். ஆதியை இசையமைப்பாளராக அறிமுனகப்படுத்தியவர் சுந்தர்.சிதான். ஆதி கோயம்புத்தூர் காரர் என்பதால் அவர் மீது பாசம் அதிகமாகி தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். பாசம் மேலும் அதிகமானதாலோ என்னவோ தற்போது தன்னுடைய பேனரில் ஹீரோ கம் டைரக்டராகவும் அறிமுகம் செய்கிறார். மனம் கொத்தி பறவையில் நடித்த ஆத்மியா இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக, கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டீசர் இன்று ஆயுதபூஜையில் வெளியாகியிருக்கிறது. இசை அமைப்பாளர்களான விஜய் ஆன்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வரிசையில் இப்போது மீசையை முறுக்கு படம் மூலம் ஹிப் பாப் தமிழா ஆதியும் ஹீரோவாக களம் இறங்குகிறார்.




