'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவின் முதல் ஷங்கர் என்றால் அது ராஜா சாண்டோதான். அவரது படங்கள் அனைத்துமே பிரமாண்டமாக இருக்கும். அவர் இயக்கிய ஒரு படம்தான் 'சவுக்கடி சந்திரகாந்தா‚. பக்காவன முதல் கமர்ஷியல் படம் என்றும் இதனை குறிப்பிடலாம். கே.ஆர்.ரங்கராஜு எழுதிய கதை நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. அதைத்தான் ராஜா சாண்டோ படமாக இயக்கினார். ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் 1936ம் ஆண்டு வெளிவந்தது.
போலி சாமியாரை பற்றிய கதை. திருக்களூர் பண்டார சன்னிதி என்ற சாமியாருக்கு ஏராளமான காதலிகள், ஒவ்வொரு காதலியும் ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள். சாமியாரின் கொட்டத்தை ஹீரோ எப்படி அடக்குகிறார் என்பதுதான் கதை. சாமியாராக காளி என்.ரத்னம் நடித்திருந்தார். அவரை அடக்கும் ஹீரோவாக பி.யூ.சின்னப்பா நடித்திருந்தார். பி.கே.ராஜலட்சுமி ஹீரோயின். என்.எஸ்.கிருஷ்ணன் காமெடியன்.
சினிமாவில் காதலர்கள் தொடாமல் பேசிக் கொண்டிருந்தபோது தொட்டு பேசி நடிக்க வைத்தவர் ராஜா சாண்டோ. இந்தப் படத்தில் கூடுதலாக ஒரு படி மேலே போய் நடிகைகளை நீச்சல் உடையுடன் நடிக்க வைத்தார். சாமியாரின் காதலிகள் அனைவரும் ஒரு தடாகத்தில் நீந்துவது போன்ற காட்சியில் நடிகைகளுக்கு குட்டை டவுசரும், சின்ன சட்டையும் வைத்திருந்தார். உடையை பார்த்த நடிகைகள் தெறித்து ஒடினார்கள். ஆடை மறைக்கும் இடம் தவிர மற்ற இடங்களை மறைக்கும் மெல்லிய உடையை (ஸ்கின் டிரஸ்) அவர்களிடம் காட்டி விளக்கிச் சொன்ன பிறகு நடித்தார்கள். படம் வெளிவந்து தியேட்டரில் படத்தை பார்த்த நடிகைகள் அதிர்ச்சி அடைந்தார்க்ள. கருப்பு வெள்ளை படம் என்பதால் ஸ்கின் டிரஸ் அணிந்திருந்தது தெரியவில்லை.
இந்தப் படம் இன்னொரு சாதனையை படைத்தது. அப்போதெல்லாம் ஒரு படம் ஒரு ஊரில் ஒரு தியேட்டரில்தான் திரையிடப்படும். 'சவுக்கடி சந்திரகாந்தா‚ முதன் முறையாக சென்னையில் 2 தியேட்டர்களில் வெளியானது.