ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! |
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைகுரியவர்களில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன். அவரின் தனி கணக்கராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் சத்யா மூவீஸ் என்ற பெயரில் தனி நிறுவனம் தொடங்கி எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்தார். அதில் பல படங்களுக்கு ஆர்.எம்.வீரப்பனே கதை எழுதியுள்ளார். அப்படி அவர் எம்.ஜி.ஆருக்காக எழுதி வைத்திருந்த கதைதான் 'ராணுவ வீரன்'.
அந்தக் கதையில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டு முதல்வர் ஆகிவிட்டதால் அவர் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி அவரை நடிக்க வைத்தார். படத்தை சத்யா மூவீஸ் தயாரித்தது. ரஜினி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார். வாலி, புலமைபித்தன் முத்துலிங்கம் பாடல்களை எழுதியிருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். 1981ம் ஆண்டு வெளிவந்தது.
ஒரு ராணுவ வீரனுக்கும், நக்சலைட் தீவிரவாதிக்குமான மோதல்தான் கதை. ரஜினி ராணுவ வீரனாகவும், சிரஞ்சீவி தீவிரவாதியாகவும் நடித்தனர். சிரஞ்சீவி வில்லனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் எம்.ஜி.ஆரை தமிழக முதல்வராகவே தோன்ற வைக்க ஆர்.எம்.வீரப்பன் முயற்சித்தார். அது கடைசி வரை முடியவில்லை. படம் 100 நாட்கள் ஓடி வெற்றிப் படமானது.