'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தென்னிந்திய மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ரொமான்ஸ் காட்டத் தெரியவில்லை என்று 'காதலிக்க நேரமில்லை' படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
கும்பகோணத்தை சேர்ந்தவரான நிர்மலா முறைப்படி பரத நாட்டியம் கற்றவர். அதில் மேற்கொண்டு பயிற்சி பெற சென்னை வந்தார். இங்கு நடந்த நடன நிகழ்ச்சிகள் பலவற்றில் ஆடினார் அப்போது அவருக்கு மேக்அப்மேனாக இருந்த நாரயணசாமி என்பவர் சினிமாவிலும் மேக்அப் மேனாக இருந்தார். அவர்தான் நிர்மலாவை சினிமாவில் நடிக்கலாம் என்று ஆலோசனை கூறினார். சில கம்பெனிகளில் வாய்ப்புகள் தேடினார் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் நவீனன், நிர்மலாவை இயக்குனர் ஸ்ரீதரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது ஸ்ரீதர் “அடுத்து நான் 'காதலிக்க நேரமில்லை' என்ற படம் எடுக்கிறேன். அப்போது அழைத்து வாருங்கள்” என்று கூறினார். சில மாதங்களுக்கு பிறகு 'காதலிக்க நேரமில்லை' ஆடிசன் நடந்தது. அதில் கலந்து கொண்ட நிர்மலா படத்தில் நடிக்க தேர்வானார்.
முதல் நாள் படப்பிடிப்பு. “அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...” என்ற பாடலை எடுத்தார் ஸ்ரீதர். இந்த பாடலில் ஒரு ஆணை நினைத்து, ரசித்து காதல் ரசம் சொட்ட சொட்ட நடிக்க வேண்டும். ஆனால் நிர்மலாவுக்கு ரொமான்ஸ் மூடு வரவில்லை. அவர் பரதநாட்டியம் போலவே ஆடினார். இதனால் ஸ்ரீதர் “உனக்கு இந்தப் படமும் கேரக்டரும் சரிபட்டு வராது அடுத்து படத்துல வாய்ப்பு தர்றேன்னு அனுப்பி விட்டார்”. கண்ணீர்விட்டபடியே திரும்பினார் நிர்மலா. அதன் பிறகு நிர்மலாவுக்கு பதிலாக ராஜஸ்ரீ நடித்தார். ஸ்ரீதரும் நிர்மலாவுக்கு கொடுத்த வாக்குப்படி தனது அடுத்த படமான 'வெண்ணிற ஆடை'யில் நிர்மலாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அன்று முதல் நிர்மலா 'வெண்ணிற ஆடை நிர்மலா' ஆனார்.




