'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
மலையாளத்தில் வெளிவந்த சூப்பர்ஹிட் படமான ஷட்டர் தமிழில் ஒரு நாள் இரவில் என்ற தலைப்பில் ரீமேக் ஆகிறது. இதனை முன்னணி எடிட்டர் ஆண்டனி இயக்குகிறார். இயக்குனர் விஜய் தயாரிக்கிறார். சத்யராஜ், மலையாள நடிகை அனுமோல், யூகி சேது, பழம்பெரும் நடிகர் ஜசரிவேலன் பேரன் வருண் நடிக்கிறார்கள். படம் வருகிற 20ந் தேதி வெளிவருகிறது. படத்தை பற்றி இயக்குனர் ஆண்டனி கூறியதாவது:
இது ஷட்டர் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் சீன் பை சீன் அந்த படத்தை அப்படியே காப்பி அடிக்கவில்லை. தமிழுக்காக சில மாறுதல்களை செய்துள்ளோம் ஷட்டர் படத்தில் இருந்த 10 காட்சிகளை அப்படியே நீக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய காட்சிகள் வைத்திருக்கிறோம். ஷட்டர் படத்தின் திரைக்கதை மெதுவாக நகரும். அப்படி இருந்தால் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது என்பதால் சில பரபரப்பான காட்சிகளை சேர்த்து படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறோம். குறிப்பாக சொன்னால் ஷட்டர் படத்தின் ஒன்லைனை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதையை மாற்றி இருக்கிறோம். இந்தக் கதைக்கு சத்யராஜ்தான் பொருத்தமானவர் என்பதை உணர்ந்து அவரை நடிக்க வைத்திருக்கிறோம். பாலியல் தொழிலாளி கேரக்டருக்கு ஒரு புதுமுகம் தேவை என்பதற்காக அனுமோல் நடிக்கிறார். வருண் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். என்றார்.