பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ஒரு நடிகர் சில படங்களில் நடித்தபின் சிறிது சிறிதாக மார்க்கெட் இழப்பார்கள். மீண்டும் ஒரு நல்ல படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்து இழந்த மார்கெட்டை மீட்டு மீண்டும் வலம்வருவது உண்டு. பலருக்கும் ஒரு மறுபிரவேசம்தான் நடக்கும். ஆனால் நடிகர் ரகுமானுக்கு மட்டும் பல மறு பிரவேசங்கள் நிகழ்ந்துள்ளன. அவர் மலையாளத்தில் நடித்த சுமார் 70படங்களில் மம்முட்டி, மோகன்லாலுடன் மட்டுமே 30 படங்கள் நடித்தவர், நிலவே மலரே,வசந்த ராகம் போன்ற படங்களில் நடித்தவர் பின்னடைவு ஏற்பட்டு காணாமல் போனார். அவரை அழைத்து வந்து மீண்டும் ஒர் அறிமுகம் போல புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பாலசந்தர் நடிக்க வைத்தார் அதன்பிறகு சற்றுக்காலம் வலம் வந்தவர் காணாமல் போனார்.
பிறகு சங்கமம் படத்தில் மறுபிரவேசம் செய்தார் சற்றுக் காலம் போனது. பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் 36 வயதினிலே படத்தில் நடித்தார். படமும் வெற்றி பெற்றது. ஜோதிகா பேசப்பட்ட அளவுக்கு ரகுமான் பேசப்படவில்லை. சற்று இடைவெளிக்குப்பின் துருவங்கள் 16 என்கிற படத்தில் நடிக்கிறார். ஏறக்குறைய இதுவும் ஒரு மறுபிரவேசம் தான். இப்படத்தில் அழுத்தமான போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்போதாவது துருவங்கள்16 அவருக்கு வெற்றிப்படமா அமைந்து தொடர் வெற்றிகளை தேடிக் கொடுக்குமா?




