ஹாலிவுட் ஸ்டைலில் ‛யாதும் அறியான்' பட டீசர் | அரச கட்டளை, என் ஜீவன் பாடுது, லியோ : ஞாயிறு திரைப்படங்கள் | நல்ல நடிகையாகவே இருக்க ஆசை திரை வண்ணக்கனவுகளுடன் வர்ஷினி | தமிழ் ரசிகர்களை நம்பினேன் : 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | 'விஜ்ஜ்ஜஜஜு…….' யார் தெரியுமா ? | மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்? | குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன | இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா |
உ படத்தில் அறிமுகமானவர் நேஹா. அந்தப் படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல் படக்குழு தடுமாறியபோது அதில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் பாண்டிச்சேரியில் இருந்த தன் தோழி நேஹாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார். நண்பனுக்காக ஒரு படத்தில் நடித்து விட்டு ஒதுங்கிவிட நினைத்த நேகாவுக்கு இப்போது அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் பெயர் டீ கடை ராஜா.
ராஜா சுப்பையா என்பவர் இயக்கி ஹீரோவாக நடிக்கிறார், இவர்கள் தவிர யோகி பாபு, மதன் பாப், பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். பன்டூன் டாக்கிஸ் தயாரிக்கிறது. வெண்ணிலா வீடு படத்தின் இசை அமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார். "வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் டீ கடை ராஜா பாடல் எனக்கு பிடிக்கும். அதையே என் படத்தின் தலைப்பாக்கி விட்டேன். காமெடி கலந்த காதல் கதை" என்கிறார் இயக்குனர் ராஜா சுப்பையா.