மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' | 3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர் |
பிரபல திரைப்பட நடிகர் சிலோன் சின்னையா லண்டனில் காலமானார். அவருக்கு வயது 70. பைலட் பிரேம்நாத், பொண்ணு ஊருக்கு புதுசு, அகல்விளக்கு, ஆணிவேர், கரைகடந்த ஒருத்தி, நீயின்றி நானில்லை உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இதுதவிர இலங்கையில் புதியகாற்று உள்பட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்தவர்.
தீவிர சிவாஜி ரசிகரான சிலோன் சின்னையா, எனக்குள் ஒரு சிவாஜி என்ற படத்தை தயாரிக்க தீவிர முயற்சியில் இறங்கி இருந்தார். இந்நிலையில் திடீரென இறந்தார்.
சிலோன் சின்னையாவிற்கு மனைவி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.