Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோயினிகளுடன் ரொமான்ஸ் பண்ண என் மனைவி முழு சுதந்திரம் கொடுத்து விட்டார்! - விஜய் ஆண்டனி பேச்சு

27 ஏப், 2015 - 09:49 IST
எழுத்தின் அளவு:
Vijay-Antony-speaks-in-India-Pakistan-team-press-meet

நான், சலீம் படங்களை அடுத்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் இந்தியா பாகிஸ்தான். ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். அவர்களுடன் பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர், டி.பி.கஜேந்திரன், ஜெகன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு தீனா தேவராஜன் இசையமைத்துள்ளார். அண்ணாமலை, கலைக்குமார் பாடல்கள் எழுதியுள்ளனர். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார்.


இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது. அப்படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.


அப்போது இந்தியா பாகிஸ்தான் படம் குறித்து விஜய் ஆண்டனி பேசுகையில், இதற்கு முன்பு நான் நடித்த இரண்டு படங்களில் இருந்து இப்படம் மாறுபட்ட கதையில் தயாராகியிருக்கிறது. இந்த படத்தில் நான் வழக்கறிஞராக நடித்திருக்கிறேன். அதேபோல் நாயகி சுஷ்மாவும் வழக்கறிஞர்தான். காதலித்து திருமணம் செய்யும் எங்களுக்கிடையே அதையடுத்து நடக்கும் பிரச்சினைகள்தான் இந்த படம். முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் காமெடிக்கு முதலிடம் கொடுத்திருக்கிறோம்.


அதோடு, ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களப்படுத்தியிருக்கிறேன். நான் எந்த படமாக இருந்தாலும் அதன் முழுக்கதையையும் கேட்பேன். ஒரு ரசிகனாக நான் கேட்கும்போது அது எனக்கு பிடித்து விட்டால் மற்றவர்களிடம் அந்த கதையைப்பற்றி கருத்து கேட்க மாட்டேன். அப்படி இந்த படத்தின் கதையை நான் கேட்டு முடித்ததும் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அவர் கதையை சொல்லச்சொல்ல நான் சிரித்துக்கொண்டேதான் இருந்தேன். என்னை சிரிக்க வைத்த இந்த கதை ரசிகர்களையும் சிரிக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.


மேலும், நான் ரொமான்ஸ் காட்சிகளில் நடிகைகளுடன் அதிகமாக கட்டிப்பிடித்து நடிப்பதில்லை என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறது. என் மனைவி தயாரிப்பாளராக இருப்பதினால்தான் நான் அப்படி நடிப்பதில்லை என்றும் கூறுகிறார்கள்.


ஆனால், உண்மை அதுவல்ல. எனக்கு அப்படிப்பட்ட கதைகள் அமையவில்லை. இந்த படத்தில்கூட படம் முடியுற நேரத்தில்தான் ஒரு காட்சியில் லேசாக ஹீரோயினியின் தோள் பட்டையில் உரசிக்கொள்வேன். அதுதான் ரொமான்ஸ். மற்றபடி அதிகப்படியான ரொமான்ஸ் உள்ள கதைகள் அமைந்தால் மற்ற ஹீரோக்களை மாதிரி நானும் ஹீரோயினிகளை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்ய தயார். அப்படி நடிப்பதற்கு என் மனைவியும் எனக்கு முழு சுந்திரம் கொடுத்து விட்டார் என்கிறார் விஜய் ஆண்டனி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)